குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு
வாலாந்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் ஊராட்சி வாலாந்தூர் கிராமத்தில் இதுவரை பொதுக்கழிப்பிடம், சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி, பேருந்து வசதி, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.