குளித்தலையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் சிலம்பம் போட்டியில் அசத்தல்

நாப்பாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில் பாராட்டு;

Update: 2025-11-15 12:43 GMT
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் ₹25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ₹15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் வெற்றி பெற்றதற்கு நாப்பாளையம் பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

Similar News