இளைஞர்களுக்கு அரசு விளையாட்டு மைதானம் : ஊராட்சி முன்னாள் உபதலைவர் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையம் அருகே இளைஞர்களுக்கு அரசு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2025-11-16 16:30 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் சாயர்புரம் -புதுக்கோட்டை தேரி சாலை பகுதியில் ஏர்போர்ட் சாலையை ஒட்டி உள்ள அரசு தரிசு நிலம் சுமார் 24 ஏக்கர் இடத்தை பஞ்சமி என்று போலி பட்டாவை உருவாக்கி தனியார்கள் பட்டா போட்டு ஆக்கிரமித்து உள்ளனர்.நான் கடந்த 2022 ம் ஆண்டு முதல் இதற்காக அனைத்து ஆவணங்களையும் அளித்து இறுதியாக பட்டாவை ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை முடிந்துள்ளது. மேற்கூறப்பட்ட இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளித்துள்ள நகலில் UDR க்கு முன் அரசு தரிசு இடம் என்றும் SLR பதிவேட்டில் ஜமீன் பெரும் பத்து சர்க்கார் தரிசு என ஆதாரபூர்வமாக வருவாய் அலுவலகத்தால் கையொப்பம் இட்டு அளிக்கபட்டுள்ளது‌.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சமி இடம் இல்லை எனவும் தகவல் அறியும் உரிமை நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு ஆவணங்கள் மற்றும் முதன் முதலாக போலி பட்டாவை வைத்து பத்திரப்பதிவு செய்த அனைத்து முதல் பத்திரத்தையும் வில்லங்க சான்றும் இந்த விசாரணைக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால் வருவாய் துறை கடந்த இரண்டு வருடமாக இழுத்தடித்து தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மற்றும் சார் ஆட்சியர் உத்தரவு மூலம் இறுதி செய்யபட்டு வருவாய் அலுவலர்க்கு விசாரணைக்கு அனுப்பபட்டு விசாரணை சுமார் 24 நாட்கள் (நவம்பர்-16/11/2025 இன்று வரை) முடிவு பெற்றுள்ளது .மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட அரசு தரிசு இடத்தை மீட்டு அரசு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி இளைஞர்களுக்கு கோரிக்கையாக உள்ளது.விரைவில் இந்த பகுதி இளைஞர்களை திரட்டி அவர்கள் கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கவனம் கொண்டு செல்வோம். இளைஞர்களை ஊக்குவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்து சுமார் 2000 இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ஊக்குவிக்கும்விதமாக அரசு விளையாட்டு மைதானம் ஏர்போர்ட் அருகே அமைத்து தரவேண்டும். இப்பகுதி இளைஞர்கள் கபடி மற்றும் கிரிக்கெட் போட்டியை தனியார் இடங்களில் உள்ள காட்டு பகுதியில் நடத்துவதை தவிர்த்து அரசுக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். கிங் நியூஸ் S.முகேஷ்குமார், ஓட்டப்பிடாரம்,

Similar News