ஆர்.டி மலையில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை

சோமவார பூஜை , சங்காபிஷேகம், நந்திபகவானுக்கு பிரதோஷம் நிகழ்ச்சி;

Update: 2025-11-17 16:49 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சோமவார பூஜை, சங்காபிஷேகம், நந்தி பகவானுக்கு பிரதோஷம் ஆகிய மூன்று விழா பூஜைகள் இன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சங்காபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பிறகு கோவில் வெளியே நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் செய்திருந்தனர்.

Similar News