காய்ச்சலால் வட மாநில தொழிலாளி பலி
குமாரபாளையத்தில் காய்ச்சலால் வட மாநில தொழிலாளி பலியானார்.;
குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் வசிப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக்குமார், 16, கட்டிட தொழிலாளி. நேற்றுமுன்தினம் பீகார்க்கு சென்று வந்த இவர், கடும் காய்ச்சலில் வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 02:50 மணியளவில் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.