இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் கண்டித்து தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் கண்டித்து தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்...;
தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தக்கோரி ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ராசிபுரம் நகர ஒன்றிய குழு மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் S.மணிமாறன். தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட கண்டனஉரை மாவட்ட துணை செயலாளர் T.N.கிருஷ்ணசாமி, ஆர்.செங்கோட்டையன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் P.R. செங்கோட்டுவேல், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் S.மீனா, கோஷங்கள் எழுப்பினர். முன்னிலை நகர துணை செயலாளர் A.கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட துணைத் தலைவர் G.ஜெகநாதன், ராசிபுரம் தாலுகா தலைவர் R. வேம்பு. A.C.ராஜா. K. ரஞ்சித் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதி, சமத்துவ நாள் காப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகரப் பொருளாளர் P.சலீம். நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்..