அரசு பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடந்தது;

Update: 2025-11-21 13:35 GMT
. குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். கண்காட்சி அமைப்பாளர் தாமரை ராஜ், 25, கூறுகையில், நான் பி.ஈ., பொறியியல் படித்துள்ளேன். இருப்பினும் பழங்கால நாணயங்கள், பழைய பொருட்கள் சேகரிப்பதில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்கால நாணயங்கள் சேகரித்து வருகிறேன். என்னிடம் 120-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள், போர்க்கால ஆயுதங்கள், குத்துக்கத்தி, கட்டாரி, ஈட்டி, வால்வு ரேடியோ, பழைய டி.வி, பழைய சுவர் கடிகாரங்கள், பழைய கேமராக்கள், அஞ்சறைப்பெட்டி, இசைத்தட்டுக்கள், 200 வருட முந்தைய பூட்டுக்கள், பெட்ரோமாக்ஸ் லைட், லாந்தர், சிம்னி விளக்கு, பீரங்கி குண்டு, கால் சிலம்பு, டெலிபோன், பழைய பாட்டில்கள், பாக்கு வெட்டி, மை கோதி, 1835 முதல் 1947 வரையிலான பத்திரங்கள், பழைய டூவீலர்களான மோபா, ராஜ்தூத், லூனா, அவந்தி, சுவேகா உள்ளிட்ட பழமையான பொருட்கள், பல வகை நினைவுப்பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன். இதனை இது வரை 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று, மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில் நாணய கண்காட்சி நடத்தி, விளக்கமும் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார். மணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று

Similar News