இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கபரமத்தி வேலூர் டி.எஸ்.பி வேண்டுகோள்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை.;
பரமத்தி வேலூர் நவ.21: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் டவுசர் மற்றும் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு மேல் ஆடையில்லாமல் முகத்தை மங்கி குல்லா போட்டு மறைத்து கொண்டும் கையில் கட்டை மற்றும் சுத்திகளை வைத்து கொண்டு வீட்டின் உள்ளே ஆட்கள் இருக்கும் போதே உள் தாழ்பாள் போடாத வீடுகளில் நுழைந்தும் கதவை வேகமாக தட்டி திறக்க சொல்லி வீடுகளில் உள்ளே நுழைந்தும் திறக்காத கதவுகளை உடைத்தும் உள்ளே நுழைந்து பொதுமக்களை மிரட்டியும்,ஆயுதங்களால் தாக்கியும் வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளனர். எனவே பரமத்திவேலூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே பொது வெளியில் தூங்க வேண்டாம் வீட்டின் உள்ளே படுத்து தூங்கும் போது கதவை உள் பக்கமாக தாழிட்டு தூங்க வேண்டும் இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு வரும் போது தனியாக வரக்கூடாது வீட்டின் உள்ளே தூங்கும் போது இரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டால் யார் என்று தெரியாமல் கதவை திறக்க வேண்டாம் வீட்டின் வெளியே சந்தேகத்திற்கு இடமாக நாய் குரைத்தாலோ,வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் சத்தம் போடுதல்,விட்டிற்கு வெளியே உள்ள குழாயில் தண்ணீர் வரும் சத்தம் கேட்டாலோ, இணைப்பை துண்டித்தாலோ,வீட்டின் மீது கல் எரிந்தாலோ சந்தேகம் படும்படி நடமாட்டம் இருந்தாலோ அண்டை வீட்டார்,உறவினர்கள் பரமத்தி வேலூர் ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பரமத்திவேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தெரிவித்துள்ளார்.