இடும்பை அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா.
இருக்கூர் கிராமம் வேட்டுவ கவுண்டர் வழித்தோன்றல் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் மூல குல வேட்டுவ கவுண்டர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா.;
பரமத்தி வேலூர்,நவ.23- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் கிராமம் வேட்டுவக்கவுண்டர் வழித்தோன்றல் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் மூல குல வேட்டுவகவுண்டர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. இடும்பை அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து பூஜை அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, புண்யாகம், யாக பூஜை மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 7.15 மணிக்குள் திருக்கட்டாரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8.15 மணிக்குள் கலச அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூல மந்திர உபதேசம் செய்தல், திருக்கட்டாரி மற்றும் பட்டம் சூட்டும் பட்டக்காரருக்கு செங்கோல் வழங்கி கவுரவித்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பட்டம் சூட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இடும்பை அல்லாள இளைய நாயக்கர் தங்கவேல் பட்டக்காரர் நல்லாசியோடு அழகு கிணத்துப்பாளையம் பழனியப்ப கவுண்டர் ஜோதி அம்மையாரின் குமாரனும் பட்டக்காரர் சோமசுந்தரம் பட்டக்காரர் அவரின் சகோதரருமான கிருஷ்ணன் என்பவர் பட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டு நன்செய் இடையாறு வேட்டுவ குலகுரு உமாபதி பண்டித குருசாமிகள் திருமடத்தில் குலகுரு சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியார் அவர்களால் தீட்சை செய்வித்து மந்திர உபதேசம் செய்து தென்னிலை பட்டக்காரர் பட்டக்காரர் கண்ணன் பட்டக்காரரால் பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக பெருமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியயில் கோவில் நிர்வாகி வைத்தியநாதன் கோட்டையண்ணசாமி, தர்மகர்த்தா தர்மலிங்கம், அல்லாள இளையான் அறக்கட்டளை செயலாளர் வேலுசாமி, வெங்கரை அம்மன் கோவில் மூல குல பங்காளிகள் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, என்ஜினீயர் சேகர் எம்எல்ஏ, மொளசி முத்து மணி, தமிழக நீதிக்கட்சி நிறுவனர் வாழவந்தியர் சரவணன், புதிய திராவிட கழக தலைவர் ராஜ்கவுண்டர், கொங்கு தேசகட்சித் தலைவர் முனுசாமி கவுண்டர், கொங்கு கலை பண்பாட்டு குழு தலைவர் ரவிக்குமார் ஜமீன் இளம் பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கவேல், கூட ச்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணி, வெள்ளியம் பாளையம் சீனிவாசன்,,ஊர் தர்மகர்த்தாக்கள்,ஊர் முப்பாட்டு கார்கள்,ஊர் பொதுமக்கள் கலந்துகொ ண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடும்பை அல்லாள இளையான் வம்சாவளி சமூக பெருமக்கள் செய்திருந்தனர்.