வாலாந்தூரில் சேரும் சகதியமான சாலையால் மக்கள் கடும் அவதி
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் கோரிக்கை;
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் இராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தூர் கிராமத்தில் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக சிபிஐஎம் சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். குளித்தலை வட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக மண் சாலை போடுவதாக கூறியிருந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் இதுவரை சாலையை சீர்படுத்தாமல் உள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் பயன்படுத்தும் சாலையானது சேரும் சகதியில் குண்டும் குழியுமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.