ஜேடர்பாளையத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி.
ஜேடர்பாளையத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.;
பரமத்திவேலூர், நவ.25: பரமத்திவேலூர் வட் டம். ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் இந்திராநகர் பகுதியில் ஜேடர்பளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த சிலநாட்களாக பெய்த கன மழை காரணமாக மழை நீர் செல்ல போதிய வடிகால் இன்றி சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது தேங்கியுள்ள மழைநீர் அருகே உள்ள பகுதிகளில் தெளித்து வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிலர் வாகன பழுது ஏற்பட்டு வாகனங்களை தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைகருத்தில்கொண்டு மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் நெடுஞ்சாலையில் தேங்காதபடி உரிய வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.