ராசிபுரம் நகர்மன்ற நியமன உறுப்பினர் பதவியேற்பு...

ராசிபுரம் நகர்மன்ற நியமன உறுப்பினர் பதவியேற்பு...;

Update: 2025-11-26 14:54 GMT
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி ராசிபுரம் நகர்மன்றத்தின் நியமன உறுப்பினராக வி.நகர், கருப்பனார் கோவில் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி எம்.முருகேசன் (45) தேர்வு செய்யப்பட்ட நியமனம் செய்யப்பட்டார். இவருக்கான பதவியேற்பு விழா புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் ஒய் நிவேதிதா முன்னிலையில், முருகேசன் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இவ்விழாவில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் வார்டு கவுன்சிலர்கள்..ஆர்.விநாயகமூர்த்தி, பிரபாகரன், சாரதி, செல்வம், செல்வராஜ், கலைமணி, நிர்மலா கேசவன், சரவணன், சண்முகம், ஜெய்பு னீஷா காதர் பாஷா, ஜெயராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News