ராசிபுரம் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்..
ராசிபுரம் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்..;
நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டக் கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். ராஜேஷ் குமார் எம்பி அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், அவர்களின் தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மேலும் 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி, முட்டை, வழங்கி சிறப்பாக துணை முதல்வர் உதயநிதி அவர்களின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் ராசிபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜா (எ) யோகராஜன், சார்பில் பழைய பஸ் நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வில் வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் , மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.