தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்தது என்ன

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் தொகுப்பு;

Update: 2025-11-29 16:22 GMT
நவம்பர் 29 தென்காசி மாவட்டத்தில் நடந்த சிறப்பு செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது . 2. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. 3. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதற்கு சவாலாக உள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் கவனத்துடனும் எச்சரிக்கையிடனும் சைகை விளக்குகளை சரியே எரிய வைத்தபடி ஓட்ட வேண்டும் . 4. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதி பகுதிகளிலும் இன்று எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்த படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வருகின்றது. செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு திரும்ப பெறப்படாமல் உள்ளதாக பிஏஓ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இறுதி நேரங்களில் இணைய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு முன்னமே சமர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். 5. இலத்தூர் அருகே கனிம வளத்தை ஏற்றி வந்த வாகனம் மோதி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 6. தென்காசியில் மாவட்டத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று ஒரு கிலோ மல்லியின் விலை 7500 தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 7. சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று இயற்கை வளத்தை குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 8. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகிறது. 9. குற்றாலத்திற்கு வரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. 10. புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பாஜக சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 11. தென்காசி மாவட்டம் குருவிகளும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டார். 12. தென்காசி மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி ஏற்பட்ட தனியார் வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த பின்பு பொதுமக்களிடையே பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகிறது.

Similar News