கடையநல்லூர் தமுமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தது
கடையநல்லூர் தமுமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தது;
கடையநல்லூரில் தமுமுக சார்பில் டிசம்பர் 6 அன்று தென்காசியில் வாக்குரிமை, வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமையே பாதுகாத்திட நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் சாகுல் ஹமீது பாதுஷா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நயினார் முகம்மது ,தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் ,தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது பாசித் , மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது மசூது , அப்துல் மஜீத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி சேகனா வடகரை நிர்வாகிகள் மைதீன், அமானுல்லா உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. தமுமுக துணை பொது செயலாளர் மைதீன் சேட்கான் தலைமைக் கழக பேச்சாளர் #கோவை_செய்யது. ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தமுமுக நகர செயலாளர் ரஹ்மத்துல்லா மமக நகர செயலாளர் முகமது அலி, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பாதுஷா, காஜா மைதீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தின் இறுதியாக நகர பொருளாளர் முகமது அலி நன்றி உரையாற்றினார்.