எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரம்
குமாரபாளையத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு ஏவிபி சந்து, வி எஸ் ஏ சந்து, கத்தாளைபேட்டை, குள்ளப்பா சந்து, சீரங்கன் சந்து ஆகிய பகுதிகளில் வாக்காளர் கணக்கீட்டு படிவம் பெறாதவர்களின் விபரங்களை அருகில் உள்ளவர்களிடம், முகவரி மாற்றம் செய்துள்ளனர் என்று கையொப்பம் பெறப்பட்டது. பி.எல்.ஓ. கண்ணன்,, சுகுமார், சித்ரா, சண்முகம், சரவணன் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். இதே போல் அனைத்து வார்டுகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.