சுரண்டையில் பைக் மீது லோடு வேன் மோதியதில் மூவர் பலி
பைக் மீது லோடு வேன் மோதிய விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட மூவர் பலி;
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் உஷா பேபி (43) இவரது கணவர் அருள் செல்வ பிரபு (45) உஷா பேபியின் தங்கை பிளஸ்ஸி (35) ஆகியோர் இன்று தோட்டத்திற்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர் அவர்கள் சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டில் இரட்டைகுளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் காய்கறி ஏற்றிக்கொண்டு வந்த லோடு வேன் எதிர்பாராத விதமாக மோதியது இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்