மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

குமாரபாளையத்தில் மனைவி காணாமல் போனதால் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2025-11-30 14:45 GMT
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் ஆயிக்கவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் மணிமேகலை, 24. தனியார் மில் தொழிலாளி. இவர் நவ. 24ல் மாலை 05:00 மணியளவில், வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை என்பதால், குமாரபாளையம் போலீசில், இவரது கணவர் கார்த்திக், 30, புகார் மனு கொடுத்தார். இதன்படி, வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மணிமேகலையை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News