டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.;
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரேவதி, 45. கருவாடு வியாபாரம். கடந்த நவ. 21, மாலை 02:30 மணியளவில், பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, தோஸ்த் வாகனத்தின் ஓட்டுனர் இவர் வந்த டூவீலர் மீது மோத, ரேவதி பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ரேவதி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த, ஓட்டுனர் தொழில் செய்யும் குணசேகரன், 27, என்பவரை கைது செய்தனர்.