ஊராட்சி மன்ற அலுவலகத்தை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் திறந்து வைத்தார்
ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலகலங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்