கடையநல்லூரில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்பு கூட்டம்

கடையநல்லூரில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடந்தது;

Update: 2025-12-02 11:50 GMT
கடையநல்லூர் தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தரப்பில் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்வு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமையில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சண்டிகர் மாநில எம்.எல்.சி லக்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ பேசியதாவது, இந்த கருத்து கேட்பு கூட்டத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்றாகும். ராகுல் காந்தியின் விஷன் இதுதான். மாவட்டத் தலைவர் என்பது கட்சியின் மிகப்பெரிய அங்கீகாரம் கொண்ட அமைப்பாகும். இந்தியாவை பொறுத்தவரை துஷ்டர்கள் கையில் இருந்து அதனை மீட்க நாம் அனைவரும் மிகப்பெரிய அளவில் முன் வர வேண்டும். மாவட்ட தலைவர் தேர்தல் களத்தில் பத்து பேர் வேட்பாளராக களம் காண்கின்றனர். உங்களது கருத்துக்களை மேலிட பார்வையாளரிடம் தெரிவிக்கலாம். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலங்குளம் செல்வராஜ், எம்.எஸ்.காமராஜ், எஸ்.கே.டி.பி.காமராஜ், பாக்கியராஜ், சுப்பிரமணியன், சங்கை கணேசன், மகேந்திரன், உதய கிருஷ்ணன், கார்வின், மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சண்முகவேல், நவாஸ்கான், செங்கோட்டை யூனியன் முன்னாள் தலைவர் சட்டநாதன், போகநல்லூர் மாணிக்கம், சர்புதீன் அபுதாகிர், கிளங்காடு மணி, மஸ்தான், சமுத்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News