வீரசிகாமணி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டியில் சிறப்பிடம் பிடித்தனர்

வீரசிகாமணி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் சிறப்பிடம் பிடித்தனர்;

Update: 2025-12-02 11:54 GMT
வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான விஸ்வா, அசான் இஷாக், செந்தில்குமார், வெற்றிமாறன், ஜெகதீஷ், பாண்டி, இசக்கி ஹரிஷ், கனகராஜ், ரிஷிகரன், சுகுனேஷ் கோகுல பிரணவ், சேதுபதி பிரகாஷ், அஸ்வின் ஆகிய மாணவர்கள் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து அணியில் வட்டார அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். தொடர்ந்து தென்காசி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியிலும் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தனர். இந்நிலையில் மாநில அளவில் திருவண்ணாமலையில் நடந்த போட்டிகளில் தென்காசி மாவட்டம் சார்பாக பங்கேற்றனர். அதில் சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட அணிகளை வீழ்த்தி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த பயிற்றுநர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி முதல்வர் கல்யாணி சுந்தரம், துணை முதல்வர் கோமா செல்வம், நிர்வாகி ஃபெலின்ஸ் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் வைபவ சிவானி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Similar News