தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டி படுகொலை
தென்காசியில் பட்டபகலில் அரசு வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று பகலில் அவரது அலுவலகத்திற்கு அருகில் அவர் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஆபத்தான நிலையில் போலீசார் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது