ராசிபுரம் அருகே மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி..
ராசிபுரம் அருகே மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி:;
ராசிபுரம் அருகே மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி: 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, 200 செயல் முறை வடிவங்களையும், 200 அறிவியல் மாதிரிகளையும் காட்சிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். மாவட்ட பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி கலந்துகொண்டு சுழற்கோப்பையும் சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்தினார். செயல்முறை வடிவ அறிவியல் கண்டுபிடிப்புப் பிரிவில் ராசிபுரம் ஹோலி சில்ரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல் பரிசாக ரூ 4,000, அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பாளையம் இரண்டாம் பரிசாக ரூ 3000, வாழப்பாடி மைக்கில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசாக 2000 பெற்றனர். அறிவியல் மாதிரி கண்டுபிடிப்பில் முதல்பரீசினை ராசிபுரம் ஹரிடேஜ் வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் பரிசினை இராசிபுரம் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், மூன்றாம் பரிசினை சூரமங்கலம் ஜெயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளிப் பிடித்தனர். மேலும் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குச் சுழற்கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையையும், ஆராய்ச்சி திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இனிதே நடைபெற்ற இந்நிகழ்வினை துணை முதல்வர் பேரசிரியர் அமுதன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததுடன், மாணவர்கள் அறிவு வளத்தை விட கற்பனை வளத்தை வளர்த்துக் கொண்டால் உலகம் விரிந்து கொண்டே இருக்கும் என்று வாழ்த்துரை வழங்கினார். செயலர் தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி, அறிவியல் கண்டுபிடிப்பில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை மாணவர்கள் எழுப்ப வேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜோஸ்ப்பின் டெய்சி அவர்கள் மாணவர்கள் கனவு காணுங்கள் என்ற சிந்தனை விதைகளை விதைத்து வாழ்த்துரை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தங்கவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு "மாணவர்களின் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களே சாதனைகளுக்கு வழிகாட்டும்' இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம்" என ஊக்கமளிக்கும் கருத்துரையை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆயில்பட்டி சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷேக் இஸ்மாயில் கலந்துகொண்டார். இந்நிகழ்வினை கல்லூரியின் துணை முதல்வர் அருள்தந்தை பொன் ரூபன், கல்லூரின் பொருளாளர் தந்தை முனைவர் ஆண்டனிக் மார்க்ஸ், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.