ராசிபுரம் நகராட்சியில் பணிகள் முடியாமல் வணிக வளாக கடை டெண்டர் அறிவிப்பு: வணிக வளாகம் முழுவதும் கட்டியப் பிறகே டெண்டர் விட அதிமுக கோரிக்கை மனு...
ராசிபுரம் நகராட்சியில் பணிகள் முடியாமல் வணிக வளாக கடை டெண்டர் அறிவிப்பு: வணிக வளாகம் முழுவதும் கட்டியப் பிறகே டெண்டர் விட அதிமுக கோரிக்கை மனு...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டும் வரும் வணிக வளாகத்தை முழுமையாக கட்டி முடித்த பிறகே கடை டெண்டர் விடவேண்டுமென அதிமுக, பாஜக சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் நிவேதிதாவிடம், ராசிபுரம் அஇஅதிமுக நகர கழக செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனு: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் அருகில், வணிக வளாகம் ராசிபுரம் நகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. வணிக வளாகம் பாதி வேலை முடிந்தும் முடியாமலும் உள்ளது. இந்த நிலையில் இன்று கடை டெண்டர் விடுவதாக அறிவித்துள்ளார்கள். வணிக வளாகம் முழுமையாக கட்டி முடித்த பின்னரே, கடைகள் டெண்டர் விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்படுள்ளது. பின்னர், செய்தியாளர்களுக்கு ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டியில், ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள 19 கடைகளில் டெண்டர் விடுவதாக அறிவித்துள்ளார்கள். வணிக வளாகத்தின் பணிகள் முழுவதும் முடிக்காமல், ராசிபுரம் நகராட்சியின் நிதி சுமையின் காரணமாக டெண்டர் அறிவித்துள்ளனர். அதிமுக கொண்டு வந்த வணிக வளாக மாடலை நீக்கிவிட்டு, தற்போது கீழ்தளம், மேல் தளம் இரண்டு தளங்களிலும் கடைகளை கொண்டு வந்துள்ளனர். மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வரும் நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில் ராசிபுரம் நகராட்சி திட்டத்தை இயற்ற வேண்டும். ஆனால், தங்களுக்காக திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதாக குற்றம்சாட்டினார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் எங்கள் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் தலைமையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் பாடுபடுவோம் என பேட்டியில் தெரிவித்தார்.