ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் அமைச்சர் வழங்கினார்..
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் அமைச்சர் வழங்கினார்..;
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 26ன்படி, விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூர் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 17 பள்ளிகளை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் 1,797 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரத்தி சட்டமன்ற தொகுதிகளில் 103 பள்ளியைச் சேர்ந்த 4,724 மாணவர்கள் 5,337 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து, 61 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், ராசிபுரம் நகர செயலாளர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.ஆர். சங்கர், வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, மற்றும் அரசு அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.