முப்பிலிவெட்டி கிராமத்தில் மினி ஜவுளிப் பூங்கா : கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்
முப்பிலிவெட்டி கிராமத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மினி ஜவுளிப் பூங்காவிற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.;
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முப்பிலிவெட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்பு திட்டம் 2025 - 2026ன் கீழ் ரூபாய்.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மினி ஜவுளிப் பூங்காவிற்கான பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் அடிக்கல்லை நாட்டினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். முப்பிலிவெட்டி கிராமத்தில் திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்பு திட்டம் 2025 – 2026ன் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் மினி ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா 50 சென்ட் நிலப்பரப்பில் 12 சென்ட் பரப்பில் கட்டிடம் அமையவுள்ளது. ஒரு கடையின் பரப்பு 72 சதுர அடி என மொத்தம் 24 கடைகளும், 01 அலுவலகமும், 01 கிட்டங்கியும் இந்த ஜவுளி பூங்காவில் அமைக்கப்படவுள்ளது. மேலும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் வசதிக்காக 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் சுற்றுசுவர் வசதிகளுடன் மினி ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ளன.