உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது

மது போதையில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-12-07 13:56 GMT
ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஈரோடு போலீசார் வெள்ளிக்கிழமை அன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் எண்ணும், ஆர்சி புக்கில் உள்ள பெயரும் மாறி இருந்ததால் இதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என போலீசார் அந்த இளைஞருக்கு அறிவுறுத்தினர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததோடு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் என்பருடன் தகறாரில் ஈடுபட்டதோடு, வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட காவலர் பெயரை குறிப்பிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என ஸ்டோரி வைத்துள்ளார். மேலும் கடுமையான ஆபாச வார்த்தைகளால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவரைத் திட்டி அதையும் ஸ்டோரியாக instaவில் வைத்திருந்திருந்தார். . இதனை தொடர்ந்து புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காவேரி ஆர்.எஸ் பகுதியை சேர்ந்த ராஜா என்பதும், இவர் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் ரவுடியை போல பாவித்துக்கொண்டு தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சட்டவிரோத செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு டவுன் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் , பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் இளைஞர் ராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் மூன்று பிரிவின் கீழ் (கொலை மிரட்டல், ஆபாச வார்த்தையில் பேசியது, அரசு ஊழியரை பணி செய்யாமல் தடுத்தது ) வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News