உடற்பயிற்சி சார்ந்த போட்டியில் குமாரபாளையம் மாணவர் முதலிடம்

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த போட்டிகளில்குமாரபாளையம் மாணவர் முதலிடம் பெற்றார்.;

Update: 2025-12-07 15:46 GMT
ஐக்கிய உலக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூட்டமைப்பு சார்பில் ,தாய்லாந்து நாட்டில் பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த போட்டிகள் நடந்தன. இந்தியா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் ஆலங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் பரிசை வென்றார்.. இவருக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் ஐக்கிய நாடுகளை சேர்ந்த அமைப்பினர் வழங்கினர் .

Similar News