மகா கும்பாபிஷேக விழா மண்டலாபிஷேக பூஜை

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது.;

Update: 2025-12-07 15:48 GMT
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள், அருள்மிகு பஞ்சமுக மகாவீரா ஆஞ்சநேயர் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா டிச. 1ல் நடந்தது. சுவாமிமார்கள் பலருடன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடுவர் கலைமாமணி ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதன் மண்டலாபிஷேக பூஜை தினசரி நடந்து வருகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபடுகிறது.

Similar News