வி.ஏ.ஓ. உதவியாளர் பணி தேர்வு
குமாரபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட இரண்டு கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் 130 பேர் பங்கேற்றனர்.;
குமாரபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட இரண்டு கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் 130 பேர் பங்கேற்றனர். குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட கலியனூர் மற்றும் கலியனூர் அக்ரஹாரம் உள்ளிட்ட இரண்டு கிராமங்களுக்கு கிராம நிர்வாக உதவியாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. எனவே இதற்கான பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 160 விண்ணப்பதார்கள் விண்ணப்பித்தனர். அதனை ஆய்வு செய்து 150 நபர்களுக்கு எழுத்துத் தேர்வு எழுத கடிதம் மூலம் தாசில்தாரால் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று எழுத்துத் தேர்வு குமாரபாளையம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கடிதம் பெற்ற 150 நபர்களில் 130 நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வில் பங்கேற்றனர். இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்ற 130 நபர்களுக்கும் முறையான பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை ஆய்வாளர்கள் உடனிருந்து தேர்வுகளை நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.