துணை முதல்வர் பிறந்தநாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

குமாரபாளையம் வடக்கு நகரத்தில் துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது.;

Update: 2025-12-07 15:56 GMT
குமாரபாளையம் வடக்கு நகரத்தில் துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகர மன்ற தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. . நகர பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜ்குமார் வரவேற்க, , பேச்சாளர்கள் ஆனந்தன், சண்முகம், அன்பழகன் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் பங்கேற்று தி.மு.க. அரசின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார். நகர பொறுப்புக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கயல்விழி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நகர மகளிர் அணி அமைப்பாளர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News