அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
பல்லடம் அடுத்த வாவிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கரி தொட்டி ஆலையால் நிலத்தடி நீராதாரம் பாதிப்பதாக கூறியும் உடனடியாக அப்புறப்படுத்த கோரியும் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கரி தொட்டி ஆலையால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதாகவும் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு கூட சுத்தமான நீர் கிடைப்பதில்லை என்றும் கூறி அப்பகுதியினர் வேதனை தெரிவித்து வந்தனர். அலுவலகத்தில் இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது விவசாயி ஒருவர் தங்களுக்கு தெரியாமல் எப்படி செயல்பாட்டிற்கு வரும் என்றும் இறப்பு சான்றிதழ் கூட பணம் கேட்டு வாங்கி கொள்கிறார்கள் அதைவிட கேவலமாக தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுகிறது என்று அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.