காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சோனியா காந்தி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர் துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட் செயலர் கோகுல்நாத, நகர செயலர் குப்புசாமி, நகர பொருளர் சிவராஜ், முன்னாள் நகர செயலர் விஸ்வநாத், பழனிச்சாமி, சொக்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.