தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமாரபாளையம் மாணவர் வெண்கலம்

டெல்லியில் நடந்த தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமாரபாளையம் மாணவர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.;

Update: 2025-12-09 15:10 GMT
புது டெல்லியில் தல்கோதர உள்விளையாட்டு அரங்கில் நான்காவது தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. எட்டு வயதுக்கு உட்பட்ட 30 கிலோ எடை பிரிவில் குமித்தே போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் குமாரபாளையத்தை சேர்ந்த 8 வயது கராத்தே வீரர் இன்பா வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் நான்கு மண்டலங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபெற்றனர் இவரது பயிற்சியாளரான ஷேடோ காய் கராத்தே அமைப்பின் ஷிகன்ஷா கெளதம் உள்பட பலர் இவரது சாதனையை பாராட்டினர்.

Similar News