வழக்கறிஞர்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு
குமாரபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.;
குமாரபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்த வேண்டும், போதுமான கட்டமைப்பு பணிகள் செய்யாததால், ஈ.பைலிங் முறை டிச. 1 முதல் அமல்படுத்தும் திட்ட்ம் ரத்து செய்திட வேண்டும், வழக்கறிஞர் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 10 லட்சத்திலிருந்து, 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி மாநிலம் முழுதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தீனதயாள்ராஜ், செயலர் துரைசாமி, பொருளர் நாகப்பன் உள்பட அனைவரும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.