புளியங்குடி திமுக சார்பில் பூத் லெவல் ஆலோசனை கூட்டம்

புளியங்குடி திமுக சார்பில் பூத் லெவல் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-12-10 14:21 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர திமுக (கிழக்கு) பகுதி 155, 156 வது பூத்துகளில் பூத்லெவல் தெருமுனைக் கூட்டம் (10.12.2025) இன்று புளியங்குடி நகர தேர்தல் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரமகுரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர செயலாளர் ஆ.அந்தோணிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகர துணைச் செயலாளர் பேரா.ஆசைக்கனி, மாவட்ட பிரதிநிதி பெருமாள் மாரிச்செல்வம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சாமுவேல், சுரேஷ், 18 வது வார்டு செயலாளர் மாரிச்செல்வம், 8வது வார்டு செயலாளர் கருத்தப்பாண்டி, 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காந்திமதி அம்மாள், இளைஞரணி நகர துணை செயலாளர், 155-வது பூத் பாக முகவர் முருகேஷ், 156-வது பூத் பாக முகவர் கணபதி, நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தராஜ், நகர கழக பேச்சாளர்கள் மீனாட்சி சுந்தரம், அப்துல் ஜப்பார், கலை இலக்கிய அணி ஜெகன்நாத பெருமாள், பண்டாரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News