தென்காசி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்;

Update: 2025-12-10 15:29 GMT
டிசம்பர் 10 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் : 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இறந்த கோழிகள் கொட்டப்பட்டுள்ளன. இரண்டு வழக்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்து போலீஸார்கள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 2. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி இன்று சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். 3. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் அருவி அருகே காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள காவலர் அறை சேதமடைந்து காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி விரைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 4. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட புளியரை காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புளியரை காவல் நிலைய ஆய்வாளராக அய்யனார் பொறுப்பேற்றுக் கொண்டார். 5. குற்றாலத்திற்கு குளிக்க வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால் கழிப்பிட வசதிக்காக 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 6. கரிவலம் வந்த நல்லூர் உப மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 11 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 7. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் எஸ் எஸ் என் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை வினாடி வினா எழுத்து மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. 8. தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருவிலஞ்சி குமாரசுவாமி கோவிலில் இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் சஷ்டி என்பதால் சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டது. 9. சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புலஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்பதால் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த சமுதாய நல்லிணக்கண செயலாற்றும் நபர்கள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை தகவல் வெளியாகியுள்ளது. 10. தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. 11. வீரகேரளம் புதூர் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் இன்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். 12. சங்கரன்கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மனு அளித்திருந்த பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவில் சேர்மன் கௌசல்யா பல பகுதிகளில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். 13. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் எஸ் பி அரவிந்தன் பொதுமக்களின் புகார் மனு குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். 14. தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News