வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு!!
ஓட்டப்பிடாரம் அருகே வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.;
.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கள்ளத்தி கிணறு கிராமம் ஆர்சி கோவில் தெருவில் வசிப்பவர் அமல்ராஜ். இவரது மனைவி புஷ்பம் (73). இவர் வயல் வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.