திண்டுக்கல் அருகே குட்கா விற்பனை
23 கிலோ குட்கா பறிமுதல் - ரூ.4,75,000 அபராதம்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 19 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை தொடர்ந்து 19 கடையிலிருந்து 23 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 19 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.4,75,000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர்