தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வன் பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் நீதிமன்றங்களில் E-Filing முறையை நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கியதை முழுமையாக நிறுத்தி வைக்க கோரி அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து JAAC நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என்றும் நீதிமன்றங்களில் வாயிலில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும், உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்