ராமநாதபுரம் மகான் இறந்த சோகத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை

மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-12-12 15:44 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனியில் வசித்து வரும் மீனவர் நேற்று இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து மகன் இறந்த செய்தி அறிந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மண்டபம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று முன் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மீனவர் களஞ்சியம் தனது வீட்டில் மீன் மோட்டார் ஓடவில்லை என மின் வயரை சரி செய்வதற்காக வயரை வாயால் கடித்த போது மின்சாரம் பாய்ந்து நெஞ்சில் காயம் ஏற்பட்டு விழுந்தவரை மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து பரிசோதனை செய்ததில் மருத்துவர் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதனை கேள்விப்பட்ட அவரது தந்தை சேகர் (58) தனது வீட்டில் இரவு 12 மணியளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மண்டபம் அரசு ஆரம்பம் கொண்டு சென்ற இறந்த இரண்டு நபர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மண்டபம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News