வத்தலகுண்டு அருகே ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அரையாண்டு தேர்வு எழுதாமல் மாணவர்கள் சாலையில் தரையில் அமர்ந்து போராட்டம்
திண்டுக்கல் வத்தலகுண்டு;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே செங்கட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் ஆசிரியர் விஜயசுந்தர் என்பவர் திடீரென வேறு பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் இன்று நடைபெறும் அரையாண்டு தேர்வு முதல் நாளான தமிழ் தேர்வு எழுதாமல் பள்ளியில் படிக்கும் 6,7,8 வகுப்பு மாணவ மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தமிழ் தேர்வு எழுதாமல் தேர்வை புறக்கணித்து பள்ளியில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது