ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!

நாமக்கல் மாவட்ட தலைவர் பா.சரவணன் தலைமையில், மாவட்ட செயலாளர் இரா.இலட்சுமி நரசிம்மன் முன்னிலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-30 13:58 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், மாநில மையம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் அச்சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் பா. சரவணன் தலைமை வகிக்க, சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா. இலட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த காத்திருப்பு போராட்டத்தின்போது, நவீன மயமாக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களை அமைத்து தர வேண்டும்., கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும்., தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலராய் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்., பதவி உயர்வை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்., பதவி உயர்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக மாற்றியமைக்க வேண்டும்., தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்., TSLR (Town Survey Land Register) பட்டா மாறுதலில் வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்., அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் நந்தகுமார் நன்றி கூறினார்.

Similar News