சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
குமாரபாளையத்தில் சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.;
குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி, 23. கட்டிட சென்டரிங் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 02:40 மணியளவில், இடைப்பாடி சாலை, ராஜாஜி குப்பம் எதிரே வந்த போது, இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டூவீலர் ஓட்டுனர், திடீரென்று பிரேக் போட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகன ஓட்டுனர், கீழே விழுந்த சூர்யமூர்த்தியின் தலை மீது பலத்த காயம் எற்படும் வகையில் ஓட்டினார். இதனால் பலத்த காயமடைந்த சூர்யமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 06:00 மனியளவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் சங்ககிரி, முருகன், 41, என்பவரை பிடித்து, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.