தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெட்ற நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாம்.
தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி 10, சனிக்கிழமை காலை பத்து மணியளவில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பாக நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் மற்றும் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும், சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்மருத்துவம், இதயம், நரம்பியல், சிறுநீரகம், குடல், சர்க்கரைநோய், மூளை நரம்பியல் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் நாமக்கல் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்தார்கள். மேலும் தி நவோதயா பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களும் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். இந்த முகாமை கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடத்தியதற்கு கீரம்பூரை சுற்றி உள்ள கிராமப்புற மக்கள் பெரும் வரவேற்பையும், ஆதரவையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள். மருத்துவத்துறை சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்தனர்.