தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் கனி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தமிழ் மக்களின் பாரம்பரியமும், பண்பாடும், புனிதமாக காட்சியளிக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாழும் அனைத்து மக்களுக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.