குளித்தலை தைப்பூச திருவிழாவை ஒட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
சிறப்பு பூஜை செய்த சிவாச்சாரியார்கள்;
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோவில் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற திருத்தலமாகும். வருடந்தோறும் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். எட்டு ஊர் சிவாலயங்களின் சோமாஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத நிகழ்வாகும். முதல் தொடக்கமாக இன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது