பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை சார்பாக காளான் உற்பத்தி மையம் தொடக்கம்.

பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறையின், பாவை வேளாண் மன்றம் மற்றும் பாவை இயற்கை வேளாண்மை அமைப்பின் சார்பில் காளான் உற்பத்தி மைய தொடக்க விழா நடைபெற்றது.;

Update: 2026-01-22 13:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தாளாளர்.மங்கை நடராஜன்   முன்னிலை வகித்தார்.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்   காளான் உற்பத்தி மையத்தினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், ‘காளான் உற்பத்தி மையமானது மாணவ, மாணவிகளாகிய உங்களுக்கு அனுபவக் கல்வி மற்றும் செயல்முறை பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காளான் விதை தயாரித்தல்,காளான் வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்கள் தயாரித்தல், விளைந்த காளான்களை சேதமற்ற சுத்திகரிப்பு செய்தல், இன்குபேசன் மேலாண்மை, காளான் விளைச்சல் அதிகரிப்பு, அறுவடைக்குப் பிந்தைய பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு போன்றவைகளை நீங்கள் தெளிவாகக் கற்றுக் கொள்ள முடியும். மேலும் நிலைத்த வேளாண் நடைமுறைகள், வேலைவாய்ப்பு திறன், சுய தொழில், வேளாண் தொழில் முனைவு திறன்கள் போன்றவற்றையும் வளர்த்துக் கொள்ளமுடியும். ஆகவே இந்த மையத்தினை நீங்கள் ஆக்கப்பூர்;வமாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசினார்.நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூத்த முதல்வர் முனைவர் என்.எழிலி, முதன்மையர் முனைவர்.கே.செல்வி, பாவை வேளாண் பொறியியல் துறைத்தலைவர் முனைவர் பி.கைலாஷ்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Similar News