திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தினரின் ஒரு கோடி ஓட்டுகள் எதிரொலிக்கும்-
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தினரின் ஒரு கோடி ஓட்டுகள் எதிரொலிக்கும்- பர்வதராஜன் கரூரில் பேட்டி;
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தினரின் ஒரு கோடி ஓட்டுகள் எதிரொலிக்கும்- பர்வதராஜன் கரூரில் பேட்டி. தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சங்கத்தின் மாநிலத் தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில பொருளாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கணேசன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமிநாதன், துணை பொது செயலாளர் மனோகர் ஜஸ்டஸ் உள்ளிட்ட சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பர்வதராஜன், கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் இரவு நேரத்தில் ஓய்வூதியர்களின் உரிமையை பறிக்கக் கூடிய மசோதாவை நிறைவேற்றி உள்ளது. எனவே இந்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறு பெறுவதற்காக அகில இந்திய அளவில் ஓய்வூதியர் அனைவரையும் ஒருங்கிணைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாபெரும் போராட்டங்கள் நடத்த இந்த மாநாட்டின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை போல, ஓய்வூதியர்களுக்கு 70 வயது வரும்போது 10% ஓய்வூதியம் உயர்வு வழங்க வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என தெரிவித்தது போல நிறைவேற்ற வேண்டும் எனவும், தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏறத்தாழ ஒரு கோடி பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். தேர்தல் காலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்றுவோம் என கூறியதை நிறைவேற்றாவிட்டால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்தார். பேட்டி: பர்வதராஜன்- பொதுசெயலாளர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம்.